விட்டு விட்டு மழை; மீண்டும் வேலயை காட்டிய மைதானம்; இந்தியா 181க்கு ஆல் அவுட்!

By Rsiva kumar  |  First Published Jul 29, 2023, 11:35 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 181 ரன்னுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய் அணி பேட்டியங் ஆடியது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பொறுப்பாக ஆடிய சுப்மன் கில், இஷான் கிஷான் அரைசதம்: மழையால் போட்டி பாதிப்பு!

Tap to resize

Latest Videos

இந்திய அணியில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில், சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடினார். எனினும், அவர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் நிதானமாக ஆடிய இஷான் கிஷான் 55 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 55 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் 1 ரன்களில் வெளியேறினார்.

WI vs IND 2nd ODI: ரோகித், கோலிக்கு ஓய்வு, சாம்சன், அக்‌ஷருக்கு வாய்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்!

கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கீடு இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மழை விடவும் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனத்கட், அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

அதன் பிறகு, பொறுப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ்வும் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  பிறகு வந்த ஷர்துல் தாக்கூர்16 ரன்களில் ஆட்டமிழக்க, உம்ரான் மாலிக் வந்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கீடு ஏற்பட்டது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே மழை நின்று போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது.

WI vs IND: மழையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு: போட்டி நடக்குமா? நடக்காதா? என்ன சொல்கிறது வானிலை ரிப்போர்ட்?

உம்ரான் மாலிக் டக் அவுட்டில் வெளியேற, முகேஷ் குமார் களமிறங்கினார். அவர், ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, குல்தீப் யாதவ் 8 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நல்ல வீரர்களை தேர்வு செய்யணும்: காவ்யாவைப் பார்த்தால் வருத்தமாக இருக்கு: கலாநிதி மாறனுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ்!

பந்து வீச்சு தரப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியோ ஷெஃப்பார்டு 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜெய்டன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும், யானிக் கரியா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

click me!