இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய் அணி பேட்டியங் ஆடியது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
WI vs IND 2nd ODI: ரோகித், கோலிக்கு ஓய்வு, சாம்சன், அக்ஷருக்கு வாய்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்!
இந்திய அணியில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இதில், சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடினார். எனினும், அவர் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் நிதானமாக ஆடிய இஷான் கிஷான் 55 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 55 ரன்கள் அடித்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஷர் படேல் 1 ரன்களில் வெளியேறினார்.
சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனத்கட், அக்ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?
கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 24.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கீடு இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மழை விடவும் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.