சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனத்கட், அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

Published : Jul 29, 2023, 05:09 PM IST
சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனத்கட், அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

சுருக்கம்

ஆசிய கோப்பைக்கு இன்னும் 2 ஒரு நாள் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனத்கட் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்கள் எடுத்தது. பின்னர், 115 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி விளையாடியது. எனினும், கடுமையான போராட்டத்திற்குப் பிறகே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு பிரிஜ்டவுனில் நடக்கிறது.

WI vs IND: மழையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு: போட்டி நடக்குமா? நடக்காதா? என்ன சொல்கிறது வானிலை ரிப்போர்ட்?

ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஏற்கனவே முடிவு செய்தது போன்று, 2ஆவது ஒரு நாள் போட்டியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். அதன்படி, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும், சஞ்சு சாம்சன், ஜெயதேவ் உனத்கட் மற்றும் அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

உலகக் கோப்பை 2023: சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த தேர்வு – ஆர்பி சிங்!

முதல் ஒரு நாள் போட்டியில் இளம் வீரர்களுக்கு பேட்டிங் ஆர்டரில் முதலில் வாய்ப்பு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா 7ஆவது வரிசையில் களமிறங்கினார். விராட் கோலி களமிறங்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா 2ஆவது ஒரு நாள் போட்டி:

சூர்யகுமார் யாதவ்விற்கு பல முறை ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 22 போட்டிகளில் 9 முறை சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்துள்ளார். 20 ரன்களுக்கும் குறைவாக 13 முறை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் வரிசையாக 3 முறை கோல்டன் டக்கில் ஆட்டமிழந்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக சஞ்சு சாம்சன் சரியான தேர்வாக இருக்கிறார். எனினும், இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?

ஒருவேளை சூர்யகுமார் யாதவ் இடம் பெற்று விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

விராட் கோலியின் இடத்தில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்று விளையாடி வருவதால், சஞ்சு சாம்சன் 4 அல்லது 5ஆவது இடத்தில் களமிறங்கலாம்.

ரவீந்திர ஜடேஜாவிற்குப் பதிலாக அக்‌ஷர் படேல் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக ஜெயதேவ் உனத்கட் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

பாண்டியாவிற்கு முதல் ஓவரா? ரோகித் சர்மாவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!