WI vs IND: மழையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு: போட்டி நடக்குமா? நடக்காதா? என்ன சொல்கிறது வானிலை ரிப்போர்ட்?

By Rsiva kumar  |  First Published Jul 29, 2023, 4:16 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு மைதானம் குறித்து இரு அணி வீரர்களும் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி பிரிஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

உலகக் கோப்பை 2023: சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் சிறந்த தேர்வு – ஆர்பி சிங்!

Tap to resize

Latest Videos

இன்றைய போட்டியும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்து ஆடினால் குறைவான ரன்களே எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் மைதானம் அப்படி இருக்கிறது. இதைத்தான் ரோகித் சர்மாவும் முதல் ஒரு நாள் போட்டிக்குப் பிறகு கூறியிருந்தார். அதில், பவுலிங் தேர்வு செய்ய மைதானம் எப்படி இருக்கிறது என்று தெரியாது என்பதால் தான் என்று கூறியிருந்தார்.

உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?

முதல் ஒரு நாள் போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்த சுப்மன் கில்லுக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடைசி 6 போட்டிகளில் சுப்மன் கில் மொத்தமாக 30 ரன்கள் கூட எடுக்கவில்லை. அதே போன்று சூர்யகுமார் யாதவ்வும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. அவர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஆதலால், வீரர்கள் ஒவ்வொரும் தங்களை அணியில் நிலை நிறுத்திக் கொள்ள பொறுப்புடன் விளையாட வேண்டும்.

பாண்டியாவிற்கு முதல் ஓவரா? ரோகித் சர்மாவை விமர்சனம் செய்த வாசீம் ஜாஃபர்!

இந்த நிலையில், தான் இன்று நடக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டியின் போது மழை குறுக்கீடு என்பதால், போட்டி பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், போட்டி ஓவர்கள் குறைக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டது. சூர்யகுமார் யாதவ் 3ஆவது வரிசையில் களமிறங்கினார்.

ஒருநாள் தொடரிலிருந்து விலகிய முகமது சிராஜ்? ஏன், என்ன காரணம் தெரியுமா?

ஹர்திக் பாண்டியா 4ஆவது வரிசையிலும், ரவீந்திர ஜடேஜா 5ஆவது வரிசையிலும், ஷர்துல் தாக்கூர் 6ஆவது இடத்திலும், ரோகித் சர்மா 7ஆவது இடத்திலும் களமிறங்கி விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 4 முதல் டி20 உலகக் கோப்பை: எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது தெரியுமா?

click me!