ஒவ்வொரு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கிரிக்கெட் உலகின் ராஜாவாகும். லண்டனில் உள்ள ஓவல் மைதானம் உச்சிமாநாடு போட்டிக்கான இடம்.
ஓவல் மைதானத்தில் இந்தியா அண்ட் ஆஸ்திரேலியா படைத்த சாதனைகள்!
ஒவ்வொரு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. இது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல. முழுமையான திட்டமிடலின் கீழ் தான் இங்கிலாந்து WTC இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் WTC இன் இறுதிப் போட்டியை நடத்துவதற்கு இங்கிலாந்தை மட்டும் ஏன் ICC நம்புகிறது என்பதற்கு 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.
காரணம் 1:
முதல் காரணம் நேரம். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான நேரத்தை வழங்குகிறது. கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் கோடிக்கணககான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஐசிசி தனது வருமானத்தின் பெரும்பகுதியை பிசிசிஐயின் உதவியுடன் சம்பாதிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஐசிசி பெரும்பாலான போட்டிகளின் நேரத்தை இந்தியாவின் ரசிகர்களின் பார்வையில் வைத்திருக்கிறது.
WTC Final: India vs Australia - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியா கடந்து வந்த பாதை!
காரணம் 2:
இரண்டாவது முக்கிய காரணம் என்னவென்றால் அது ஜூன் மாதம் நிகழும் வானிலை. இந்த வானிலையில் இங்கிலாந்தில் மட்டுமே விளையாடுவது சாத்தியமானது. இந்த மாதத்தில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி நடக்காமல் இருப்பதற்கு இங்குள்ள வானிலை மாற்றமே காரணம். இந்த மாதத்தில் இந்த நாடுகளில் எல்லாம் மழை பெய்யும். இல்லையென்றால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் இந்த ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் வானிலை தெளிவாக இருக்கும்.
WTC Finalல் தோற்றாலும் கவலையில்லை, இதுவரையில் வந்ததே பெருசு: ராகுல் டிராவிட்!
காரணம் 3:
மூன்றாவது காரணம் லண்டன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் ஹாட் ஸ்பாட். இங்கிலாந்தில் கோடை காலம் மே முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இங்கிலாந்துக்கு வருகை தருவார்கள். இது இங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கும் பயனளிக்கிறது. WTC இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து சிறந்த தேர்வாக இருப்பதற்கு இதுவே காரணம்.
பயிற்சியின் போது ரோகித் சர்மா காயம்: கையில் பேண்டேஜ் போட்டுக் கொண்டு மீண்டும் பயிற்சி!
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடத்திலும், ஆஸ்திரேலியா 2ஆவது இடத்திலும் உள்ளன. கடந்த 2021ல் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
உமேஷ் யாதவ்வா? அஸ்வினா? என்ன பிளான்? இந்தியா பிளேயிங் 11!
கடந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றும் என்றூ எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது டெஸ்ட் கிரிக்கெட் உலகக் கோப்பை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தற்போது இறுதிப் போட்டி வரை வந்துள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு சீசன் 2 ஆண்டுகள் ஆகும். இந்தத் தொடர் 2021 முதல் 2023 வரை உள்ளது. இந்த தொடரில் 9 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 27 டெஸ்ட் தொடர்கள் விளையாடப்பட்டு 72 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.