ஓவல் மைதானத்தில் இந்தியா அண்ட் ஆஸ்திரேலியா படைத்த சாதனைகள்!

By Rsiva kumarFirst Published Jun 7, 2023, 10:51 AM IST
Highlights

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷி டிராபிக்கான இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் எத்தனை மணிக்கு ஆரம்பம்? எந்த சேனலில் பார்க்கலாம்? இன்னிங்ஸ் எப்போ முடியும்?

ஆனால், ஆஸ்திரேலியா கடைசியாக நடந்த ஓவல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதுவரையில் 104 போட்டிகள் ஓவல் மைதானத்தில் நடந்துள்ளது. இதில், 88 போட்டிகளில் டாஸ் வென்ற அணி தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த 88 போட்டிகளில் முதலில் ஆடிய அணி 38 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 29 போட்டிகளில் பீல்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.

WTC Final: India vs Australia - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியா கடந்து வந்த பாதை!

கடைசியாக நடந்த 9 போட்டிகளில் 5ல் முதலில் பீல்டிங் செய்த அணி 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதிகளவில் ரன்கள் சேர்க்கும் மைதானமாக ஓவல் மைதானம் திகழ்கிறது. லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஹெடிங்லி, டிரெண்ட் பிரிட்ஜ், எட்ஜ்பாஸ்டன் மற்றும் ரோஸ் பவுல் ஆகிய மைதானங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஓவல் மைதானம் அதிக ரன்கள் எடுக்கும் சுழுல் கொண்டுள்ளதாக விளங்குகிறது.

WTC Finalல் தோற்றாலும் கவலையில்லை, இதுவரையில் வந்ததே பெருசு: ராகுல் டிராவிட்!

இதுதவிர பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதாவது, ஒவ்வொரு 54 பந்துகள் அல்லது 30 ரன்களுக்கு இந்த மைதானத்தில் விக்கெட் விழுந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் முதல் விக்கெட்டை கைப்பற்றியிருக்கின்றனர்.

பயிற்சியின் போது ரோகித் சர்மா காயம்: கையில் பேண்டேஜ் போட்டுக் கொண்டு மீண்டும் பயிற்சி!

இந்தியாவின் சாதனை: ஓவல் மைதானம்

ஓவல் மைதானத்தில் இந்தியா விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. இதில், 7 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற் பெற்றது. இந்தப் போட்டியில் தான் ரோகித் சர்மா 2ஆவது இன்னிங்ஸில் 127 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 50 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 57, 60, ரிஷப் பண்ட் 50, புஜாரா 61 ரன்னும் சேர்த்தனர்.

உமேஷ் யாதவ்வா? அஸ்வினா? என்ன பிளான்? இந்தியா பிளேயிங் 11!

ரோகித் சர்மா படைக்கும் சாதனைகள்:

இதுவரையில் 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 83 இன்னிங்ஸ் விளையாடி 3379 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 9 சதம், ஒரு இரட்டை சதம், 14 அரைசதம் அடங்கும். இந்த ஓவல் மைதானத்தில் ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலமாக ரோகித் சர்மா தனது 50ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் சாதனையை படைப்பார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 27 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதுவரையில் இந்தியா ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றியுள்ளது. முதல் முறையாக இரு அணிகளும் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றும் முனைப்பில் இன்று விளையாடுகின்றன.

ஆஸ்திரேலியா சாதனை: ஓவல்

இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா விளையாடிய 34 போட்டிகளில் 7ல் வெற்றியும், 17ல் தோல்வியும் அடைந்துள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

click me!