ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றாலும் கவலையில்லை, நாங்கள் இதுவரையில் வந்ததே பெருசு என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.
பயிற்சியின் போது ரோகித் சர்மா காயம்: கையில் பேண்டேஜ் போட்டுக் கொண்டு மீண்டும் பயிற்சி!
தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றியது. அதன் பிறகு ஒரு ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபியை கைப்பற்றியது கூட கிடையாது. ஆனால், 5 உலகக் கோப்பையும் டி20 உலகக் கோப்பையும் வென்ற ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது கடினமானதாக பார்க்கப்படுகிறது.
ஆசிய U20 தடகளப் போட்டியில் டெகாத்லான் பிரிவில் இந்திய வீரர் சுனில்குமார் தங்கம்!
இந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பின் ஐசிசி தொடர்களில் வெற்றி பெறவில்லை என்று விமர்சனம் இருந்தாலும் அதற்காக, நாங்கள் எந்த அழுத்தத்தையும் சந்திக்கவில்லை என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ஐசிசி டிராபியை வெல்லும் முயற்சியில் நாங்கள் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. அதே சமயம் அதை வென்றால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒரு ஐசிசி தொடரை வெல்வது நல்ல உணர்வை கொடுக்கும்.
உமேஷ் யாதவ்வா? அஸ்வினா? என்ன பிளான்? இந்தியா பிளேயிங் 11!
இந்த இறுதிப் போட்டி கடந்த 2 வருட கடின உழைப்பு. கடந்த 6 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதோடு, இங்கிலாந்தில் தொடரை சமன் செய்து எதிரணிக்கு சவாலை கொடுத்தோம். அது போன்ற தொடர்ச்சியான வெற்றி நடை ஐசிசி உலகக் கோப்பையை வெல்லாததால் மாறிவிடும் என்று நான் நினைக்கவில்லை. அது நான் பெரிய வெற்றியாகும். எனினும், வருடம் முழுவதும் கடுமையாக உழைத்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா போராடி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வெல்லவில்லை என்றாலும் லீக் சுற்றுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்ததை பெரிது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!