Latest Videos

IND vs NED: 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் டாப் 5 பிளேயர்ஸ் அரைசதம் அடித்து சாதனை!

By Rsiva kumarFirst Published Nov 12, 2023, 6:05 PM IST
Highlights

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 48 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியின் முதல் 5 வீரர்கள் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. பெங்களூருவில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.

India vs Netherlands: 30 பந்துகளில் 50 ரன்கள் – சுப்மன் கில்லிற்கு பாராட்டு தெரிவித்த விராட் கோலி!

சுப்மன் கில் 51 ரன்கள்:

இதில், சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த உலகக் கோப்பையில் தனது 3ஆவது அரைசதம் கடந்தார். அதோடு, ஒரு நாள் போட்டிகளில் 12ஆவது அரைசதம் அடித்தார். ஆனால், அவர் நீண்ட நேரம் நிற்கவில்லை. அவர் 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா 61 ரன்கள்:

சுப்மன் கில்லைத் தொடர்ந்து ரோகித் சர்மா 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 12 ரன்கள் எடுத்ததன் முலமாக ஓபனராக சர்வதேச கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், இந்த ஆண்டில் மட்டுமே அவர் 60 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஒரு கேப்டனாக ரோகித் சர்மா 24 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

IND vs NED: சர்வதேச கிரிக்கெட்டில் ஓபனராக 14,000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை!

விராட் கோலி 51 ரன்கள்:

சுப்மன் கில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி பெங்களூரு ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மைதானம் என்பதால், அதிரடியாக விளையாடினார். கோலி 53 பந்துகளில் அரைசதம் அடித்து ஒரு நாள் போட்டிகளில் தனது 71ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பையில் 7ஆவது அரைசதம் அடித்துள்ளார். ஆனால், அவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. விராட் கோலி 56 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரி உள்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் 128* ரன்கள்:

இவர்களது வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்துள்ளார். அவர், 47 பந்துகளில் 57 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடினார். இதன் மூலமாக 48 ஆண்டுகால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். கடைசியாக சில போட்டிகளுக்குப் பிறகு தனது முதல் உலகக் கோப்பை சதத்தை பதிவு செய்தார். கடைசியாக ஷ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 128 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போதும் நீங்க விளையாடி கிழிச்சது – ஓரங்கப்பட்டப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்!

கேஎல் ராகுல் 102 ரன்கள்:

ஆனால், இதோடு நிற்கவில்லை. 5ஆவது வீரராக கேஎல் ராகுலும் இணைந்து கொண்டார். அவர், 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியில் டாப் 5 வீரர்கள் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து விளையாடிய கேஎல் ராகுல் இந்த உலகக் கோப்பை போட்டியில் தனது சதத்தை பதிவு செய்துள்ளார். அவர் 64 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

India vs Netherlands: சரவெடியாய் வெடிக்குமா ரோகித் சர்மா அண்ட் கோ? டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

click me!