WTC Final : நான் கேப்டனாக இருந்தா இப்படி செய்திருக்க மாட்டேன் – சவுரங் கங்குலி!

By Rsiva kumar  |  First Published Jun 8, 2023, 1:32 PM IST

நான் கேப்டனாக இருந்து டாஸ் ஜெயித்திருந்தால் கண்டிப்பாக பேட்டிங் தான் தேர்வு செய்திருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். நேற்றைய நிலவரப்படி முதலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோருடன் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூரும் அணியில் இடம் பெற்றார்.

இப்போது தெரியாது: அஸ்வின் இல்லாதது கடைசி 2 நாளில் தான் தெரியும் – ரிக்கி பாண்டிங்!

Tap to resize

Latest Videos

அதுமட்டுமின்றி, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ரவீந்திர ஜடேஜாவும் ஒரு ஸ்பின்னராக அணியில் இடம் பெற்றார். இது தவிர விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஐசிசி தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக திகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் அணியில் இடம் பெறவில்லை. இதுவரையில் இங்கிலாந்தில் நடந்த 6 போட்டிகளிலும் அஸ்வின் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததே தப்பு; இதுல அஸ்வின வேறு எடுக்காம தப்பு மேல தப்பு பண்ணிய ரோகித் சர்மா!

இங்கிலாந்தில் இருக்க கூடிய மற்ற மைதானங்களான லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஹெடிங்லி, டிரெண்ட் பிரிட்ஜ், எட்ஜ்பாஸ்டன் மற்றும் ரோஸ் பவுல் ஆகிய மைதானங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஓவல் மைதானம் அதிக ரன்கள் எடுக்கும் சூழுல் கொண்டுள்ளதாக விளங்குகிறது. மேலும், சுழலுக்கு சாதகமான மைதானமாகவும் விளங்குகிறது.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி நிதியுதவி?

ஆதலால், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் நான் கேப்டனாக இருந்திருந்தால் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சு தேர்வு செய்திருப்பேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விமர்சனம் செய்துள்ளார்.

தனது பார்ட்னரை சந்திக்கவே இல்லை – சுப்மன் கில் உடனான காதல், டேட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்த சாரா அலி கான்!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் எடுத்துவிட்டால் தானாகவே எதிரணிக்கு அழுத்தம் சென்றுவிடும் என்று கூறியுள்ளார். அதோடு ரவிச்சந்திரன் அஸ்வினையும் அணியில் எடுக்காததற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் ஆடி வெற்றி பெற்றதை யாரும் மறந்து விடக் கூடாது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசுவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி வெற்றி கண்டுள்ளது. இன்றும், அதே யுக்தியைத் தான் கையாண்டுள்ளது. ஆனால், வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின் தான் சிறந்த பவுலராக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WTC Final-லில் முதல் வீரராக சதம் அடித்து சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்; 22 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 146 ரன்கள்!

click me!