ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்துள்ளார் என்று முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு முதல் 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. இதில், உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 43 ரன்களில் வெளியேறினார். மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோகித் சர்மா ரூ.15 கோடி நிதியுதவி?
அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரியாக விளாசவே ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் டிராவிஸ் ஹெட் இந்தியாவிற்கு எதிராக தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
சதம் அடித்த முதல் வீரர்:
அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராடியும் பலன் இல்லை. இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டிற்கு நிலைத்து நின்று 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.
பார்ட்னர்ஷிப்:
அதோடு மைக்கேல் கிளார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 214 ரன்கள் பார்ட்னர்ஷிப், சிட்னி கிரேகோரி மற்றும் ஹெரி ஹாட் ஆகியோரது 221 ரன்கள் பார்ட்னர்ஷிப் மற்றும் டான் பிராட்மேன் மற்றும் ஆர்ச்சி ஜாக்சன் ஆகியோரது 243 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முறியடித்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான போட்டி – பார்ட்னர்ஷிப்:
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் 239 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை முறியடித்துள்ளனர். ஓவல் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித் 138 (நாட் அவுட்), 7, 143, 80, 23 மற்றும் 95 ரன்கள் (நாட் அவுட்) என்று ரனகள் சேர்த்துள்ளார்.
இறுதியாக முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. இதில், டிராவிஸ் ஹெட் 156 பந்துகளில் 22 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 146 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 14 பவுண்டரி உள்பட 95 ரன்களும் எடுத்து களத்தில் இருக்கின்றனர்.
பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஓவல் மைதானத்தில் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துவிட்டார் என்று சவுரங் கங்குலி, ரிக்கி பாண்டிங், சுனில் கவாஸ்கர் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக் கூடிய உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்காததும் அவர் செய்த மிகப்பெரிய தவறு என்று விமரிசித்து வருகின்றனர்.
ஓவல் மைதானத்தில் போட்டியின் போது வானம் மேகமூட்டத்துடன் இருந்ததன் காரணமாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. இது அணி மற்றும் அணி நிர்வாகம் எடுத்த முடிவு என்று ரோகித் சர்மா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.