ஹர்திக் இதை செய்தால் ரோகித்துக்கு பதிலாக அவர் தான் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் - சுனில் கவாஸ்கர்!

By Rsiva kumar  |  First Published Mar 15, 2023, 10:04 PM IST

ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட உள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் போட்டி வரும் 17 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. டெஸ்ட் தொடரை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப சுழுல் காரணமாக அவர் ஓய்வு எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுதல் கொடுத்த கிரேஸ் ஹாரிஸ் - ஆளு ஆளுக்கு அவுட்டான யார் தான் அடிக்கிறது? யுபி வாரியர்ஸ் 135!

Tap to resize

Latest Videos

இதன் காரணமாக முதல் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட உள்ளார். டி20 போட்டியில் தனது கேப்டன் பொறுப்பை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு நடந்த 15 ஆவது ஐபிஎல் சீசனை சொல்லலாம். இந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

கோலி, ரோகித் சர்மாவுக்கு கிளம்பும் நேரம் வந்துருச்சா? பிருத்வி ஷாவிற்கு ஏன் வாய்ப்பு இல்லை? முரளி விஜய் கேள்வி

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டி20 போட்டிகளில் அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அவர் சிறப்பாக வழி நடத்தினார். இதுவரையில் டி20 போட்டிகளில் சாதித்த அவர் மும்பையில் நடக்கவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

காயம் பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் வச்சு நடைபயிற்சி செய்யும் ரிஷப் பண்ட்!

முதல் ஒரு நாள் போட்டியில் மட்டும் அவர் வென்று விட்டால் வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு ஒரு நாள் போட்டி கிரிக்கெட்டுக்கு அவர் முழு நேர கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்பு உண்டு. அவர், கேப்டனாக செயல்படும் போட்டிகளில் எல்லாம் எல்லா அழுத்தத்தையும் தானே பெற்றுக் கொண்டு மற்ற வீரர்களை எந்தவித அழுத்தமும் இன்றி விளையாட வைக்கிறார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸைப் போன்று மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் தகுதி - வரலாற்று சாதனையில் டைட்டில் வின் பண்ணுமா?

click me!