CSK, IPL 2024: ரிஷப் பண்ட்டை விடுவிக்கும டெல்லி கேபிடல்ஸ்–சந்தோஷமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் பண்ட்?

By Rsiva kumar  |  First Published Jul 20, 2024, 10:05 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்டை 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணி விடுவிக்க முடிவு செய்துள்ள நிலையில், பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐபிஎல் 2024 தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 18ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2025 வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்த வருட இறுதிக்குள்ளாக ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதில், ஒவ்வொரு அணியும் தாங்கள் விரும்பும் வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு அணியிலுள்ள வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

RCB Retained Players:ஆர்சிபிக்கு தாவும் கேஎல் ராகுல் – ஃபாப் டூப்ளெசிஸூக்கு பிறகு ஆர்சிபி கேப்டனாக வர வாய்ப்பு

Tap to resize

Latest Videos

undefined

மேலும், ஒவ்வொரு அணியும் 3 முதல் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்று ஏற்கனவே கூறப்பட்டது. இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் வரும் 30 அல்லது 31 ஆம் தேதி பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. இந்த நிலையில் தான் ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் அணியிலிருந்து விலகியுள்ளார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த ரிக்கி பாண்டிங் ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக அணியிலிருந்து விலகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் அணியானது ரிஷப் பண்ட்டை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை டெல்லி கேபிடல்ஸ் அணியானது ரிஷப் பண்ட்டை விடுவித்தால் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உங்களுக்கு துணிச்சல், தைரியம் இருந்தால்……முதல் முறையாக சானியா மிர்சா உடனான திருமணம் குறித்து பதிலளித்த ஷமி!

ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி விரைவில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த அணிக்கு அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் தேவை என்பதால், ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி உடனான 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அணியின் கேப்டனான கேஎல் ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டனாகவும் கேஎல் ராகுல் செயல்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கேஎல் ராகுலைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் இஷான் கிஷான் ஆர்சிபி அணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா ஏன் கேப்டன் அல்லது துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை தெரியுமா?

click me!