ICC WTC: புள்ளி பட்டியலில் முதலிடத்தை நோக்கி இந்தியா..! ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சரிவு

Published : Feb 19, 2023, 03:38 PM IST
 ICC WTC: புள்ளி பட்டியலில் முதலிடத்தை நோக்கி இந்தியா..! ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சரிவு

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பிறகு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷி புள்ளி பட்டியலில் இந்திய அணியின் வெற்றி விகிதம் 61.67 சதவிகிதத்திலிருந்து 64.06 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தான் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளை பொறுத்து வெற்றி விகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 75.56 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 58.93 சதவிகிதத்துடன் இந்திய அணி 2ம் இடத்திலும் இருந்தன. 3ம் இடத்தில் இலங்கையும், 4ம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. 

IND vs AUS: 2வது டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! 2-0 என தொடரில் முன்னிலை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பின் 61.67 சதவிகிதமாக இந்திய அணியின் வெற்றி விகிதம் உயர்ந்த அதேவேளையில், ஆஸ்திரேலிய அணியின் விகிதம் 75.56லிருந்து 70.83ஆக குறைந்தது.

இந்நிலையில், டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட்டிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணியின் வெற்றி விகிதம் 61.67லிருந்து 64.06 ஆக உயர்ந்தது. இந்திய அணி 2ம் இடத்தில் நீடித்தாலும், அந்த இடத்தை வலுவாக பிடித்ததுடன், முதலிடத்தை நோக்கி நகர்கிறது. ஆஸ்திரேலிய அணியின் விகிதம் 70.83லிருந்து 66.67 சதவிகிதமாக குறைந்தது. 

ஆண்டர்சன் - பிராட் வேகத்தை சமாளிக்க முடியாமல் சரணடைந்த நியூசிலாந்து.! முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணியை 3வது டெஸ்ட்டில் வீழ்த்தினால் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறிவிடும். ஆஸ்திரேலிய அணி 2ம் இடத்திற்கு பின் தங்கிவிடும். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?