ICC WTC புள்ளி பட்டியல்: பாக்., - ஆஸி., டெஸ்ட் டிராவாவது இந்திய அணிக்கு அனுகூலம்..!

Published : Mar 17, 2022, 07:25 PM ISTUpdated : Mar 17, 2022, 07:28 PM IST
ICC WTC புள்ளி பட்டியல்: பாக்., - ஆஸி., டெஸ்ட் டிராவாவது இந்திய அணிக்கு அனுகூலம்..!

சுருக்கம்

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிராவானதற்கு பின், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023ம் ஆண்டுக்கான போட்டிகள் நடந்துவருகின்றன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில், ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றி சதவிகிதங்களின் வரிசைப்படுத்தப்படுகின்றன. ஃபைனலுக்கு முன், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:

ஆஷஸ் தொடரில் அபார வெற்றி பெற்று 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி தான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளுமே டிராவில் முடிந்ததால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி விகிதமும் குறைந்துவருகிறது. அதேபோலத்தான் 2ம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் வெற்றி விகிதமும் குறைந்துள்ளது.

இதையும் படிங்க - IPL 2022: டெல்லி கேபிடள்ஸ் வீரர் யோ யோ டெஸ்ட்டில் தோல்வி.. 22 வயசுலயே மோசமான ஃபிட்னெஸ்

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிரா ஆனதையடுத்து, முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி விகிதம் 77.77லிருந்து 71.42 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2ம் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் வெற்றி விகிதம் 66.56லிருந்து 61.11ஆக குறைந்துள்ளது.

60 சதவிகிதத்துடன் தென்னாப்பிரிக்க அணி 3ம் இடத்திலும், 58.33 சதவிகிதத்துடன் இந்திய அணி 4ம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான்  - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் டிரா ஆவது இந்திய அணிக்கு அனுகூலமான விஷயம். அந்த 2 அணிகள் ஆடும் போட்டிகள் டிரா ஆவதால், அந்த அணிகளின் வெற்றி விகிதம் குறையும் அதேவேளையில், இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் முதலிரண்டு இடங்களுக்குள் வந்துவிடும். முதலிரண்டு இடங்களுக்குள் வந்தால்தான் ஃபைனலில் ஆடமுடியும்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!