West Indies vs England: 2வது டெஸ்ட்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து

Published : Mar 17, 2022, 05:50 PM IST
West Indies vs England: 2வது டெஸ்ட்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.  

முதல் டெஸ்ட் டிரா:

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையேயான 3 டெஸ்ட்  போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவான நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.

2வது டெஸ்ட்:

2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி டக் அவுட்டானார். முதல் டெஸ்ட்டில் சதமடித்த ஜாக் க்ராவ்லி இந்த போட்டியில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். 

ஜோ ரூட் சதம்:

மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் லீஸ் 30 ரன்னில் அவுட்டாக, 80 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. 45 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் மற்றும் டேனியல் லாரன்ஸ் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி, முதல் நாள் ஆட்டத்தின் எஞ்சிய 45 ஓவர்களையும் ஆடினர்.

அபாரமாக விளையாடிய ஜோ ரூட் சதமடித்தார். சிறப்பாக ஆடிய  லாரன்ஸ், முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் அடித்துள்ளது. ஜோ ரூட் 119 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!