டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அபார சாதனை.. கில்கிறிஸ்ட், ஏபிடி, ரிஷப் பட்டியலில் இணைந்தார் ரிஸ்வான்

Published : Mar 17, 2022, 06:21 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அபார சாதனை.. கில்கிறிஸ்ட், ஏபிடி, ரிஷப் பட்டியலில் இணைந்தார் ரிஸ்வான்

சுருக்கம்

ஆஸி.,க்கு எதிரான கராச்சி டெஸ்ட்டின் கடைசி இன்னிங்ஸில் சதமடித்த முகமது ரிஸ்வான், மிகப்பெரிய விக்கெட் கீப்பர்களின் சாதனை பட்டியலில் இணைந்தார்.  

கராச்சி டெஸ்ட்:

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான கராச்சி டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 556 ரன்களை அடித்தது. ஆனால் பாகிஸ்தான் அணியோ வெறும் 148 ரன்களுக்கு சுருண்டது. 408 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து கடைசி 2 நாள் ஆட்டத்தில் 506 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டியது பாகிஸ்தான் அணி. கிட்டத்தட்ட அசாத்தியமான அந்த இலக்கை பாகிஸ்தான் அணி அபாரமாக விரட்டியது. பாபர் அசாமின் அபார சதம் (196), ரிஸ்வானின் சதம்(104) மற்றும் அப்துல்லா ஷாஃபிக்கின் மிகச்சிறப்பான பேட்டிங் (96) ஆகியவற்றின் காரணமாக கடைசி நாள் முழுக்க பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களை குவித்தது. அத்துடன் கடைசி நாள் ஆட்டம் முடிந்ததால் போட்டி டிராவானது.

முகமது ரிஸ்வான் சாதனை:

இந்த போட்டியின் கடைசி இன்னிங்ஸில் சதமடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் சதமடித்த 2வது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.

1995ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் மொயின் கான், டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் சதமடித்திருக்கிறார். அதன்பின்னர் 27 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ரிஸ்வான் தான் அந்த சாதனையை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க - மை டியர் பவுலர்ஸ், அதை செய்ய தயங்கவே தயங்காதீங்க.. அப்புறம் உங்க கெரியருக்குத்தான் பிரச்னை - அஷ்வின் அட்வைஸ்

சர்வதேச அளவில், டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் சதமடித்த 7வது விக்கெட் கீப்பர் ரிஸ்வான் ஆவார். ஆடம் கில்கிறிஸ்ட், ஏபி டிவில்லியர்ஸ், ரிஷப் பண்ட், ஆலன் நாட், மேட் பிரையர், மொயின் கான் ஆகிய 6  விக்கெட் கீப்பர்கள் இந்த சாதனையை செய்துள்ள நிலையில், இந்த பட்டியலில் 7வது விக்கெட் கீப்பராக இணைந்துள்ளார் ரிஸ்வான்.
 

PREV
click me!

Recommended Stories

Sachin Tendulkar Record: சச்சினுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிறப்பு அனுமதி.. வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
Vaibhav Sooryavanshi: டீம் இந்தியாவுக்குள் நுழைந்த 15 வயது வைபவ்... ஆனாலும் அப்பாவின் ஆசை இதுதான்..