முதல் முறையாக விண்வெளியில் ஏவப்பட்ட ஐசிசி உலகக் கோப்பை டிராபி – 1,20,000 அடி உயரம், -65 டிகிரி செல்சியஸ்!

Published : Jun 26, 2023, 09:57 PM IST
முதல் முறையாக விண்வெளியில் ஏவப்பட்ட ஐசிசி உலகக் கோப்பை டிராபி – 1,20,000 அடி உயரம், -65 டிகிரி செல்சியஸ்!

சுருக்கம்

ஐசிசி ஆண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபி இன்று ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனில் இணைக்கப்பட்டு, உலகிற்கு அனுப்பப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபி சுற்றுப்பயணத்தை ஆரவாரத்துடன் தற்போது தொடங்கியுள்ளது. உலகக் கோப்பை டிராபியை பூமியிலிருந்து சுமார் 1,20,000 அடி உயரத்தில் உள்ள பல அடுக்கு மண்டலத்தில் செலுத்துவதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளது.

கடைசில வந்து காப்பாத்தி கொடுத்த வாஷிங்டன் சுந்தர்; சீகம் மதுரை பாந்தர்ஸ் 141 ரன்கள் குவிப்பு!

உலகக் கோப்பை டிராபியானது, ஒரு பெஸ்போக் ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனுடன் இணைக்கப்பட்டு 120,000 அடி உயரத்திற்கு அப்பால் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த டிராபியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வந்து தரையிறங்கியது. ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணை நாளை காலை 11.30 மணிக்கு மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது.

பிளான் போட்டு தூக்க தயாரான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: மதுரைக்கு எதிராக பவுலிங்!

அதோடு, உலகக் கோப்பை டிராபியானது நாளை முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கிறது. அடுத்த ஒரு சில மாதங்கள், இந்த டிராபியானது உலகம் முழுவதும் குவைத், பஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா என்று 18 நாடுகள் முழுவதும் சென்று கடைசியாக இந்தியாவிற்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தோனியை ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை செய்திருக்க வேண்டும் – வீரேந்தர் சேவாக்!

முதல் முதலாக உலகக் கோப்பை டிராபியானது கடந்த 2019 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் சென்றது. ஆனால், அதன் பிறகு கொரோனா காலகட்டம் என்பதால், விதிமுறைகள் காரணமாக டிராபியானது சுற்றுப்பயணத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. இதையடுத்து தற்போது நாளை முதல் டிராபியானது உலகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது. ஸ்ட்ராடோஸ்பியர் வழியாக டிராபியின் பயணத்தின் போது, ​​ஸ்ட்ராடோஸ்பெரிக் பலூனில் இணைக்கப்பட்ட 4k கேமராக்கள், பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் அமர்ந்திருந்த டிராபியின் வீடியோக்களை படம்பிடித்தது.

கர்நாடகாவில் மஞ்சுநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த கேஎல் ராகுல்!

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருப்பதாவது: வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத வகையில் கிரிக்கெட்டானது இந்தியாவை ஒன்றிணைக்கிறது. உலகக் கோப்பைக்கான கவுண்டனில் டிராபி சுற்றுப்பயணம் என்பது ரசிகர்கள் எங்கிருந்தாலும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஒரு அற்புதமான வாய்ப்பாக அமையும். இந்தச் சுற்றுப்பயணம் இந்தியா முழுவதும் பரவலாகப் பயணித்து, கிரிக்கெட்டின் மிகப்பெரிய காட்சியின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்ள சமூகங்களை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள சின்னச் சின்ன இடங்கள், நகரங்கள் மற்றும் அடையாளங்களை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.

டிராபி சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில், ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், “ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபி சுற்றுப்பயணம் என்பது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான கவுண்ட் டவுனில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகெங்கிலும் உள்ள சில முக்கிய அடையாளங்களுக்குச் செல்வதுடன், அந்தந்த மாநிலத் தலைவர்களைச் சந்திப்பது, சமூக முயற்சிகளைத் தொடங்குவது மற்றும் கிரிக்கெட் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிப்பது போன்றவற்றை இந்தப் பயணத்தில் காணலாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?