பிளான் போட்டு தூக்க தயாரான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: மதுரைக்கு எதிராக பவுலிங்!

Published : Jun 26, 2023, 08:02 PM IST
பிளான் போட்டு தூக்க தயாரான சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: மதுரைக்கு எதிராக பவுலிங்!

சுருக்கம்

சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 18ஆவது போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 18ஆவது போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் விளையாடி வருகிறது. தற்போது வரையில் மதுரை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது.

தோனியை ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை செய்திருக்க வேண்டும் – வீரேந்தர் சேவாக்!

இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2ல் போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

சீகம் மதுரை பாந்தர்ஸ்:

ஆதித்யா, ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், ஸ்வப்னில் சிங், ஸ்ரீ அபிஷேக், தீபன் லிங்கேஷ், சுரேஷ் லோகேஸ்வர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சரவணன், குர்ஜாப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா

கர்நாடகாவில் மஞ்சுநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த கேஎல் ராகுல்!

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:

பிரதோஷ் ஃபால், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபராஜித் (கேப்டன்), எஸ் ஹரிஷ் குமார், ரஞ்சன் ஃபால், உதிரசாமி சசிதேவ், ராமலிங்கம் ரோகித், எஸ் மதன் குமார், ராஹில் ஷா, எம். சிலம்பரசன், ராக்கி பாஸ்கர்

பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்தியா: எங்கே, ஏன், எதற்கு தெரியுமா?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?