போட்டியில் காலதாமதம் ஏற்படாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் முறையில் முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையானது சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அகமதாபாத்தில் நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் குறித்து விவாதிக்கபட்டது. அதன்படி, போட்டியை விரைந்து முடிக்கும் நோக்கத்தில் ஒரு நிமிடத்திற்குள்ளாக ஒரு ஓவர் தொடங்கப்பட வேண்டும். இல்லையென்றால், 5 ரன்கள் பெனால்டியாக கொடுக்கப்படும் என்ற விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பல போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக பந்து வீசி முடிக்கப்படாத நிலையில் போட்டி சம்பளத்திலிருந்து அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 50 ஓவர்கள் போட்டியை காண்பதற்கு ரசிகர்களின் வருகை குறைந்து வருகிறது என்றும், நேரம் வீணடிக்கப்படுகிறது என்றும் பேச்சு எழுந்து வருகிறது. ஆதலால், 50 ஓவர்கள் போட்டியை குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரித்து வருகின்றனர்.
அரசியலில் களமிறங்கும் ஷாகிப் அல் ஹசன் – சொந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு!
இது ஒரு புறம் இருந்தாலும் கிரிகெட்டில் நாளுக்கு நாள் புது புது விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. அப்படியொரு நடைமுறை தான் தற்போதும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஓவர்களுக்கு இடையில் எடுக்கப்படும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு முயற்சியாக சோதனை அடிப்படையில் ஸ்டாப் கிளாக் முறை கொண்டுவரப்படுகிறது. வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்கள் இந்த நடைமுறை அமலில் இருக்கும். அதுவும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே இந்த நடைமுறை. டெஸ்ட் போட்டிகளுக்கு இல்லை.
ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்து வீச்சு அணியானது அடுத்த ஓவரை வீச தயாராக இல்லையென்றால், ஒரு இன்னிங்ஸில் 3ஆவது முறையாக இது நடக்கும் பட்சத்தில் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை – ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி, 3 முறை தாமதமானால் 5 ரன் அபராதம்!