சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி நடக்கிறது.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. உலகக் கோப்பைக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி மூலமாக இலங்கை உலகக் கோப்பைக்குள் நுழைந்தது. இதையடுத்து 10ஆவது அணிக்கான ரேஸில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
மெர்சிடஸ், பிஎம்டபிள்யூ, ஆடி காரும் கிடையாது; விராட் கோலி வாங்கிய முதல் கார் எது தெரியுமா?
உலகக் கோப்பை தொடரானது இந்தியா முழுவதும் 10 மைதானங்களில் நடக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் முதல் போட்டி தொடங்குகிறது. அதே போன்று இறுதிப் போட்டியும் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. அக்டோபர் 8ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
எப்போதும் நம்மை நெருக்கமாக வைப்பதிருப்பது ஃப்ரண்ட்ஷிப் அண்ட் உணவு – சச்சின் டெண்டுல்கர்!
இதே போன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மட்டும், அக்டோபர் 14 – நியூசிலாந்து – வங்கதேசம், அக்டோபர் 18 நியூசிலாந்து – பாகிஸ்தான், அக்டோபர் 23 பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், அக்டோபர் 27 பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா என்று மொத்தம் 5 போட்டிகள் நடக்கிறது. அப்படி நடக்கும் போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு எப்படி செய்வது, டிக்கெட் விலை எவ்வளவு என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
டிவியில் ஒளிபரப்பு இல்லை; இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை எப்படி பார்ப்பது?
எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மைதானம் என்றூம் அழைக்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பதால், டிக்கெட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்பாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இந்தியா போட்டி என்றாலே டிக்கெட்டுகள் விரைவில் விற்று தீர்ந்து விடுகிறது. ஆகையால், மைதானத்திற்கு சென்று பார்க்க ஆசைப்படும் கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட் விற்பனை தொடங்கியதும் உடனே பெற்றுக் கொள்ளுங்கள். எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திற்கான டிக்கெட் விலை ரூ. 1000 முதல் ரூ. 10,000 வரை இருக்கும். இருப்பினும், சில சிறப்பு டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கும், அதன் விலை ரூ. 15,000 வரை இருக்கும். மேலும் டிக்கெட் விலை உங்கள் இருக்கைகளுக்கு ஏற்ப மாறுபடும். எனவே, வசதிகளுடன் கூடிய இருக்கை வேண்டுமானால், இந்த விலையுயர்ந்த டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?
எப்படி புக் செய்வது?
இருக்கைகள் | டிக்கெட் விலை |
லோயர் டயர் (கீழ் அடுக்கு சீட்) | ரூ.2500 |
பெவியலியன் மொட்டை மாடி | ரூ.1750 |
அண்ணா பெவிலியன் | ரூ.7500 |
அப்பர் டயர் (மேல் அடுக்கு சீட்) | ரூ.8500 |
ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸ் | ரூ.10000 |
விஐபி கார்ப்பரேட் பாக்ஸ் | ரூ.10000 |