கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தைக்காக இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 63ஆவது போட்டி நேற்று லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 89 ரன்கள் குவித்தார். கேப்டன் குர்ணல் பாண்டியா 49 ரன்களில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
தவறான ஷாட் அடிக்க போய் கிளீன் போல்டான சூர்யகுமார் யாதவ்: வைரலாகும் வீடியோ!
இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் குவித்தது. அப்படி 90 ரன்கள் குவித்தும் மும்பை 5 ரன்களில் தோல்வி அடைந்தது. ரோகித் சர்மா 37 ரன்களில் வெளியேறினார். அடுத்து இஷான் கிஷான் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டிம் டேவிட் மற்றும் கேமரூன் க்ரீன் இருவரும் களத்தில் இருந்தனர். மும்பையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அதுவரையில் 2 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்திருந்த மோசின் கான் நேஹல் வதேரா விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இதன் காரணமாக அவரை நம்பி, குர்ணல் பாண்டியா கடைசி ஓவரை கொடுத்தார். இந்த ஓவரில் வெகு சிறப்பாக பந்து வீசிய மோசின் கான் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இனி நோபாலில் பேட்ஸ்மேனுக்கு ரன் – ஐசிசியின் புதிய விதிமுறைகள் ஜூன் 1ல் அமல்!
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக லக்னோ புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்தது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய லக்னோ அணியின் பந்து வீச்சாளர் மோசின் கான் கூறியிருப்பதாவது: வலைபயிற்சியில் என்ன பயிற்சி செய்தேனோ அதைத் தான் களத்திலும் செயல்படுத்தினேன். கடைசி ஓவருக்காக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. முதல் 2 பந்துகளை மிதமான வேகத்தில் வீசினேன். அதன் பிறகு யார்க்கர்களை வீசினேன்.
லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடம் பிடிக்குமா மும்பை? சென்னையின் நிலைமை?
கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் காயமடைந்து வெளியேறியது சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி உடல்நிலை சரியில்லாத நிலையில் எனது தந்தை ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு நேற்று தான் வீடு திரும்பினார். இந்த வெற்றியை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன். கண்டிப்பாக இந்தப் போட்டியை எனது தந்தை பார்த்திருப்பார் என்று கூறியுள்ளார்.