இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஹென்ரி நிகோல்ஸ் அரிதினும் அரிதான முறையில் விக்கெட்டை இழந்தார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது.
3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று(ஜூன்23) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் அடித்துள்ளது. டேரைல் மிட்செல் 78 ரன்களுடனும் டாம் பிளண்டெல் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்கின்றனர்.
ஹென்ரி நிகோல்ஸ் 19 ரன்களுக்கு இந்த போட்டியில் ஆட்டமிழந்தார். நிகோல்ஸ் வித்தியாசமான முறையில் பரிதாபகரமாக ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் 56வது ஓவரை ஜாக் லீச் வீசினார்.
இதையும் படிங்க - NED vs ENG: பிட்ச்சுக்கு வெளியே போன பந்தை கிரவுண்டுக்கு வெளியே அனுப்பிய பட்லர்..! வைரல் வீடியோ
அந்த ஓவரின் 2வது பந்தை நிகோல்ஸ் ஸ்டிரைட்டாக அடிக்க, பந்து எதிர்முனையில் நின்ற டேரைல் மிட்செலை நோக்கி சென்றது. டேரைல் மிட்செல் பந்தை பார்த்து விலகினார். அவர் விலகினாலும் பேட்டை எடுக்க தாமதமானதால், நிகோல்ஸ் அடித்த பந்து, மிட்செலின் பேட்டில் பட்டு மிட் ஆஃப் திசையில் நின்ற அலெக்ஸ் லீஸிடம் சென்றது. அதை லீஸ் கேட்ச் பிடிக்க, பரிதாபமாக அவுட்டாகி வெளியேறினார் நிகோல்ஸ். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
What on earth!? 😅🙈
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
🏴 🇳🇿 pic.twitter.com/yb41LrnDr9
ஐசிசி விதிப்படி, பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து, பவுலிங் முனையில் உள்ள ஸ்டம்ப்பில் அடித்தோ, எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேன்/அவரது பேட்டில் பட்டோ, அம்பயர் மீது பட்டோ ஃபீல்டிங் அணி கேட்ச் செய்தால் பேட்ஸ்மேன் அவுட்டுதான். எனவே அந்தவகையில் நிகோல்ஸ் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்து பரிதாபமாக ஆட்டமிழந்தார்.