முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினால், நன்றாக சம்பாதிப்பார். அது அவருக்கும், அவரது மகளுக்கும் உதவியாக இருக்கும் என்று அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் கூறியுள்ளார்.
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் 4 போட்டிகளில் இடம் பெறாத முகமது ஷமி அதன் பிறகு நடந்த 4 போட்டிகளில் விளையாடி 5, 4, 5, 2 என்று மொத்தமாக 16 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கிளென் மேக்ஸ்வெல்லின் 201 ரன்கள் சாதனைக்கு தோனி தான் காரணமா? திகைக்க வைக்கும் பின்னணி காரணம்!
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த நிலையில், முகமது ஷமியின் முன்னாள் மனைவியான ஹசின் ஜஹான், இந்திய அணிக்கு வாழத்து தெரிவித்த நிலையில், ஷமிக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினால், நன்றாக சம்பாதிப்பார். இது அவருக்கும், அவரது மகள் ஆயிராவுக்கும் உதவியாக இருக்கும். இந்திய அணிக்கு மட்டுமே அவர் வாழ்த்துதெரிவித்து, ஷமிக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
முகமது ஷமி மீது, விபச்சாரம், மேட்ச் பிக்ஷிங், குடும்ப வன்முறை போன்ற பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஹசின் ஜஹான் முன்வைத்தார். மேலும், குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்று மிரட்டவும் செய்துள்ளார். அதோடு, தனது மகள் ஆயிராவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.
வேகப்பந்து வீச்சாளர் மீது விபச்சாரம், திருமண கற்பழிப்பு, மேட்ச் பிக்சிங் மற்றும் குடும்ப வன்முறை போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய ஷமி மற்றும் ஜஹான் கசப்பான விவாகரத்தை அனுபவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ஷமி, மேட்ச் பிக்சிங் குறித்து கூறுகையில், தனது நாட்டிற்காக சாகவும் தயாராக இருக்கும் நிலையில், ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
Here we go......
She said it........ pic.twitter.com/vjuCZufXsJ