கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடையாத நிலையில், உலகக் கோப்பையிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். அவர் தனது முதல் ஓவரை வீச வந்த போது இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியிலிருந்து விலகி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டார். பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம் பெற மாட்டார் என்றும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், அவர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், கடைசியாக நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இடம் பெறவில்லை. பாண்டியா இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றார். ஆனால், பவுலிங்கில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார்.
NED vs AFG: ஒரே போட்டியில் 4 ரன் அவுட் – கடைசி வரை பொறுமையாக விளையாடிய நெதர்லாந்து 179க்கு அவுட்!
முகமது ஷமி விளையாடிய 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதில், 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நெதர்லாந்திற்கு எதிராக நடக்கும் கடைசி போட்டியில் இடம் பெறுவார் என்றும், அரையிறுதிப் போட்டிகளில் இடம் பெறவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவருக்கு காயம் இன்னும் குணமடையாத நிலையில், இந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு
அதுமட்டுமின்றி அவருக்குப் பதிலாக பிரஷித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு பிளேயிங் 11ல் இடம் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை 5ஆம் தேதி நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இதையடுத்து கடைசியாக 12ஆம் தேதி நடக்கும் 45ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D