ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 34 ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 34ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓடவுட் மற்றும் வெஸ்லி பாரேசி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு
இதில் பாரேசி 1 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த மேக்ஸ் ஓடவுட் 40 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 42 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கொலின் அக்கர்மேன் 29 ரன்கள் சேர்த்த ரன் அவுட் முறையில் பரிதாபமாக வெளியேறினார். இதையடுத்து வந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 86 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 58 ரன்கள் சேர்த்த நிலையில், ரன் அவுட்டாகி வெளியேறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கோல்டன் டக் அவுட்டில் ரன் அவுட் முறையில் நடையை கட்டினார். இப்படி ஒரே போட்டியில் நெதர்லாந்து அணி உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். கடைசியாக வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஐபிஎல்லில் 30 பில்லியன் டாலர் பங்குகளை வாங்க சவுதி அரேபியா விருப்பம்!