ஹர்திக் பாண்டியாவின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா..? கேட்க நல்லாத்தான் இருக்கு.. ஆனால் நடக்குமா..?

Published : Jan 02, 2023, 10:46 PM IST
ஹர்திக் பாண்டியாவின் புத்தாண்டு தீர்மானம் என்ன தெரியுமா..? கேட்க நல்லாத்தான் இருக்கு.. ஆனால் நடக்குமா..?

சுருக்கம்

2023ல் ஒருநாள் உலக கோப்பையை வெல்வதுதான் புத்தாண்டில் தான் எடுத்த தீர்மானம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.  

ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி அடுத்தடுத்து 2 பெரிய டி20 தொடர்களில் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தது. இந்திய அணியின் தோல்வி, டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி அணுகுமுறையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.

டி20 உலக கோப்பை தோல்விக்கு பின் டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்களின் இருப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோலவே, அதன்பின்னர் டி20 கிரிக்கெட்டில் ரோஹித்தும் கோலியும் பெரிதாக ஆடுவதில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது. 

2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு இடமில்லை..?

இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் டி20 அணியின் கேப்டன்சியை அவர் இப்போதே கிட்டத்தட்ட நிரந்தரமாக ஏற்றுவிட்டார். ஏனெனில் ரோஹித் பெரும்பாலும் டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்துவகையிலும் அபாரமான பங்களிப்பை அணிக்கு வழங்கும் சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, ஐபிஎல்லில் கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி அறிமுக சீசனிலேயே அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். 

ஐபிஎல்லில் கேப்டன்சி திறனை நிரூபித்ததால் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றி பெற்றுவருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக அவரது கேப்டன்சியில் டி20 தொடரை வென்ற நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்படுகிறார்.

இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியா..? இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை

நாளை (ஜனவரி 3) இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆடவுள்ள நிலையில், பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது, புத்தாண்டில் எடுத்த தீர்மானம் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, 2022 எனக்கு மேஜிக்கல் ஆண்டாக இருந்தது. ஒரு சிறிய பிரேக் எடுத்து எனது ஃபிட்னெஸை மேம்படுத்திக்கொண்டு அணிக்கு வந்தேன். டி20 உலக கோப்பையை வெல்ல நினைத்தோம். ஆனால் அது கடந்த ஆண்டு நடக்காமல் போனது. 2023ல் உலக கோப்பையை ஜெயிப்பது தான் எனது புத்தாண்டு தீர்மானம் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!
Yashasvi Jaiswal: வைபவ் வந்ததும் ஜெய்ஸ்வாலை கழட்டிவிடும் RR..? MI உடன் மெகா டிரேட் டீல்..?