அடிச்ச அடில, கேப்டன் பொறுப்ப ரோகித்திடம் கொடுத்துட்டு பவுண்டரி லைனுக்கு ஓடிய பாண்டியா – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumarFirst Published Mar 27, 2024, 11:37 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அடித்த அடியில் ஹர்திக் பாண்டியா, கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

SRH அணியின் கோட்டை என்று சொல்லப்படும் ஹைதராபாத் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இடையிலான 8ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. இதில், டிராவிஸ் ஹெட் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

SRHக்காக ஐபிஎல் சரித்திரத்தை மாற்றி அமைத்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென்!

மாயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்படி டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ஜோடி சேர்ந்து ஹர்திக் பாண்டியா, குவெனா மபகா, ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா என்று ஒருத்தருடைய ஓவரையும் விட்டு வைக்காமல் சரமாரியாக விளாசினர். இருவரும் மாறி மாறி அரைசதம் அடித்தனர். இருவரும் அடித்த அடியைப் பார்த்து கதி கலங்கிப் போன ஹர்திக் பாண்டியா தனது கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் கொடுத்துவிட்டு தெறித்து ஓடியுள்ளார்.

புதிய வரலாறு படைத்த SRH – 277 ரன்கள் குவித்து சாதனை – கண்ணீர்விட்டு அழாத குறையா அடிவாங்கிய MI!

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, கடந்த போட்டியில் பவுண்டரி லைனில் நிற்க வைத்து ரோகித் சர்மாவை அலைக்கழித்த ஹர்திக் பாண்டியா இந்த முறை ரோகித் சர்மாவை 30 யார்டு வட்டத்திற்குள் நிற்க வைத்துவிட்டு அவர் பவுண்டரி லைனுக்கு சென்ற வீடியோ காட்சி வைரலானது. அதன் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித் சர்மா பீல்டிங் செட் செய்தார்.

18, 16 பந்துகளில் போட்டி போட்டு அரைசதம் - மும்பை இந்தியன்ஸ் அஸ்திவாரத்தை ஆட்டி வைத்த ஹெட், அபிஷேக் சர்மா!

எனினும் ரோகித் சர்மாவால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோரை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் என்று அனைவரும் சரமாரியாக வெளுத்து வாங்கினர். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது.

 

Rohit Sharma sent hardik pandya on the boundary line 😭😭🔥

This is peak cinema 😭😭🔥🔥https://t.co/lR9uJNp4IW

— ᴘʀᴀᴛʜᴍᴇsʜ⁴⁵ (@45Fan_Prathmesh)

 

click me!