IPL 2023: முதல் போட்டியில் CSK vs GT மோதல்..! டாஸ் ரிப்போர்ட்.. இரு அணிகளின் இம்பேக்ட் பிளேயர்ஸ் இவங்கதான்

Published : Mar 31, 2023, 07:33 PM ISTUpdated : Mar 31, 2023, 07:44 PM IST
IPL 2023: முதல் போட்டியில் CSK vs GT மோதல்..! டாஸ் ரிப்போர்ட்.. இரு அணிகளின் இம்பேக்ட் பிளேயர்ஸ் இவங்கதான்

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 16வது சீசன் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இன்று நடக்கும் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.

முதல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆடும் லெவனுடன் சேர்த்து கூடுதல் வீரராக இம்பேக்ட் பிளேயர் என்று ஒருவரை எடுத்துக்கொள்ளலாம். அந்த வீரரை ஆட்டத்தின் போக்கை பொறுத்து ஆட்டத்தின் இடையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி

அந்தவகையில், குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன், ஜெயந்த் யாதவ், மோஹித் சர்மா, அபினவ் மனோகர், கேஎஸ் பரத் ஆகிய 5 வீரர்களில் ஒருவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிஎஸ்கே அணி, துஷார் தேஷ்பாண்டே, சேனாபதி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகிய ஐவரில் ஒருவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தலாம். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில்), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயால், அல்ஸாரி ஜோசஃப்.

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

சிஎஸ்கே அணி: 

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, மொயின் அலி, ஷிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?