ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் அணி அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுத்தது.
ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 10 அணிகளில் உள்ள 87 இடங்களை நிரப்புவதற்கான இந்த ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம்விடப்படுகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்..! புதிய தலைவர் நியமனம்
முதல் வீரராக கேன் வில்லியம்சன் ஏலம் விடப்பட்டார். ரூ.2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட கேன் வில்லியம்சனை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக ரூ.2 கோடிக்கு வந்த வரை லாபம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுத்தது.
2015லிருந்து ஐபிஎல்லில் ஆடிவரும் கேன் வில்லியம்சன், 2018லிருந்து 2022 வரை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை சிறப்பாக வழிநடத்தினார். 2018 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார். சமகாலத்தின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் கேப்டன்களில் ஒருவரான கேன் வில்லியம்சனை எந்த அணியும் எடுக்க ஆர்வம் காட்டாதது பெரும் அதிர்ச்சி.