மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான ஏலம் இன்று மும்பையில் நடந்தது. இதில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது ரூ.1 கோடி வரையில் செலவு செய்து ஆஸ்திரேலியா வீராங்கனையான ஃபோப் லிட்ச்ஃபீல்டை எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான ஏலத்திற்கு மட்டும் 165 வீராங்கனைகள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால், இதிலிருந்து வெறும் 9 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 30 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டனர். சரியாக 3 மணிக்கு மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் தொடங்கியது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 2ஆவது முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார்.
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டு, 8 வீராங்கனைகள் தக்க வைக்கப்பட்டனர். இதையடுத்து குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் பர்ஸ் தொகையாக அதிகபட்சமாக ரூ.5.95 கோடி கைவசம் இருந்தது. இன்று நடந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான ஃபோல் லிட்ச்பீல்டை அதிகபட்சமாக ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதன் பிறகு இந்திய வீராங்கனையான ஆல்ரவுண்டர் மேக்னா சிங்கை ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. இந்திய வீராங்கனை த்ரிஷா பூஜிதா ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்திய வீராங்கனை காஷ்வீ கௌதம் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து மற்றொரு வீராங்கனை பிரியா மிஸ்ரா ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் மீடியம் பாஸ்ட் பவுலரான லாரன் சீட்டில் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து வீராங்கனையான கேத்ரின் எம்மா பிரைஸ் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பிறகு இந்திய வீராங்கனையான மன்னத் காஷ்யப் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் ஏலம் எடுக்கப்படாத இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி கடைசியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இறுதியாக தரணும் பதான் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
WPL 2024 Auction Mumbai: ரூ. 2 கோடிக்கு டெல்லி அணியில் ஏலம் எடுக்கப்பட்ட அன்னபெல் சதர்லேண்ட்!
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
ஆஷ்லே கார்ட்னர் (ரூ. 3.2 கோடி), பெத் மூனி (ரூ.2 கோடி), தயாளன் ஹேமலதா (ரூ.30 லட்சம்), ஹர்லீன் தியோல் (ரூ.40 லட்சம்), லாரா வோல்வார்ட் (ரூ.2 கோடி), ஷப்னம் ஷகில் (ரூ.10 லட்சம்), சினே ராணா (ரூ.75 லட்சம்), தனுஜா கன்வர் (ரூ.50 லட்சம்),
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
அன்னபெல் சதர்லேண்ட், அஷ்வினி குமாரி, ஜார்ஜியா வேர்ஹாம், ஹர்லி காலா, கிம் கார்த், மான்சி ஜோஷி, மோனிகா பட்டேல், பருணிகா சிசோடியா, சபினேனி மேகனா, சோபியா டங்க்லி, சுஷ்மா வர்மா.
ஏலம் எடுக்கப்பட்ட வீராங்கனைகள்:
ஏலம் எடுக்கப்பட்ட பிறகு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் பர்ஸ் தொகையாக ரூ.1.45 கோடி மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.