இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி தற்போது மும்பையில் நடக்கிறது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மஹிமா கவுருக்குப் பதிலாக, சார்லோட் டீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று இந்திய மகளிர் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கனிகா அகுஜா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக டைட்டஸ் சாது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
WPL 2024 Auction Mumbai: ரூ. 2 கோடிக்கு டெல்லி அணியில் ஏலம் எடுக்கப்பட்ட அன்னபெல் சதர்லேண்ட்!
ஏற்கனவே முதல் போட்டியை இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றிய நிலையில், இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து கைப்பற்றிவிடும். ஆதலால், இந்தப் போட்டியில் எப்படியாவது இந்திய மகளிர் அணி வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக போராடும்.
இந்திய மகளிர் அணி:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ரேகர், டைட்டஸ் சாது, ரேணுகா தாகூர் சிங், சைகா இஷாக்.
இங்கிலாந்து மகளிர் அணி:
டேனியல் வியாட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளான், லாரன் பெல், சார்லோட் டீன்.