GGT vs UPW: வான வேடிக்கை காட்டிய தீப்தி சர்மா – அரண்டு போன குஜராத் – கடைசில யுபி 8 ரன்களில் தோல்வி!

By Rsiva kumarFirst Published Mar 11, 2024, 11:10 PM IST
Highlights

யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான 18ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியாது 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இன்றைய 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பெத் மூனி 52 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 159 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு யுபி வாரியர்ஸ் அணியானது விளையாடியது. இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அலீசா ஹீலி 4, கிரன் நவ்கிரே 0, சமரி அத்தபத்து 0 வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிரேஸ் ஹாரிஸ் 1, ஷ்வேதா ஷெராவத் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

யுபி வாரியர்ஸ் அணியானது 6.6 ஓவர்களில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு தான் தீப்தி சர்மா மற்றும் பூனம் கேம்னர் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினர். யுபி அணி 10 ஓவருக்கு 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த 10 ஓவருக்கு 92 ரன்கள் குவித்து 8 ரன்களில் தோல்வியை தழுவியது. தீப்தி சர்மா 60 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் உள்பட 88 ரன்னுடனும், பூனம் கேம்னர் 36 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதன் மூலமாக 2ஆவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதே போன்று, யுபி அணியானது 3 வெற்றிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுபி வாரியர்ஸ்:

அலீசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கிரன் நவ்கிரே, சமரி அத்தபத்து, கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா, ஷ்வேதா ஷெராவத், பூனம் கேம்னர், ஷோபி எக்லெஸ்டோன், சைமா தாகூர், ராஜேஸ்வரி கெயக்வாட், அஞ்சலி சர்வானி.

குஜராத் ஜெயிண்ட்ஸ்:

லாரா வால்வார்ட், பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), போப் லிட்ச்பீல்டு, தயாளன் ஹேமலதா, அஷ்லேக் கார்ட்னர், பாரதி ஃபுல்மாலி, கத்ரின் பிரைஸ், மன்னட் காஷ்யப், தனுஜா கன்வர், மேக்னா சிங், சப்னம் முகமது ஷகீல்.

click me!