பயிற்சிக்கு முன்னதாக தேங்காய் உடைத்து, பூஜை போட்ட மும்பை இந்தியன்ஸ் – வைரலாகும் ஹர்திக் பாண்டியா வீடியோ!

By Rsiva kumar  |  First Published Mar 11, 2024, 8:04 PM IST

ஐபிஎல் 2024 போட்டிகளுக்கு முன் பயிற்சியை தொடங்க உள்ள நிலையில் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா சாமி படத்திற்கு மாலை போட்டு தேங்காய் உடைக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது ஐபிஎல் தொடர் வரும் 22ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது எப்படி விளையாடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது முதல் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Tap to resize

Latest Videos

ஐபிஎல் தொடருக்காக எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியானது சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என்று ஒவ்வொருவரும் தற்போது அணியுடன் இணைந்து வருகின்றனர். இன்னும் பயிற்சியை தொடங்காத நிலையில் தற்போது சாமி படத்திற்கு மாலை போட்டு தேங்காய் உடைத்து இனிப்புகள் படைத்து பூஜை செய்யும் ஹர்திக் பாண்டியாவின் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பூஜைக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளரான லக்‌ஷித் மலிங்கா அணியுடன் இணைந்துள்ளார். ரோகித் சர்மா, திலக் வர்மா, இஷான் கிஷான் என்று யாரும் இதுவரையில் அணியுடன் இணையவில்லை. விரைவில் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

चला सुरु करूया 🙏🥥 pic.twitter.com/XBs5eJFdfS

— Mumbai Indians (@mipaltan)

 

click me!