யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான 18ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இன்றைய 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி லாரா வால்வோர்ட் மற்றும் பெத் மூனி இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், இருவரும் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் லாரா அவசரப்பட்டு இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். அவர் 30 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த தயாளன் ஹேமலதா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதே போன்று போப் லிட்ச்போல்டு 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் கேப்டன் பெத் மூனி அதிரடியாக விளையாடினாலும், மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. அஷ்லேக் கார்ட்னர் 15 ரன்னிலும், கத்ரின் பிரைஸ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 52 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷோபி எக்லெஸ்டோன் 4 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 159 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு யுபி வாரியர்ஸ் அணியானது விளையாடி வருகிறது.
யுபி வாரியர்ஸ்:
அலீசா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கிரன் நவ்கிரே, சமரி அத்தபத்து, கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா, ஷ்வேதா ஷெராவத், பூனம் கேம்னர், ஷோபி எக்லெஸ்டோன், சைமா தாகூர், ராஜேஸ்வரி கெயக்வாட், அஞ்சலி சர்வானி.
குஜராத் ஜெயிண்ட்ஸ்:
லாரா வால்வார்ட், பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), போப் லிட்ச்பீல்டு, தயாளன் ஹேமலதா, அஷ்லேக் கார்ட்னர், பாரதி ஃபுல்மாலி, கத்ரின் பிரைஸ், மன்னட் காஷ்யப், தனுஜா கன்வர், மேக்னா சிங், சப்னம் முகமது ஷகீல்.