அடி மேல் அடி வாங்கி பரிதாபமாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!

By Rsiva kumarFirst Published May 27, 2023, 9:48 AM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

ஐபிஎல் திருவிழாவின் 2ஆவது குவாலிஃபையர் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. மழை குறுக்கீடு காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

சேப்பாக்கதை விட இரவில் ஜொலிக்கும் நரேந்திர மோடி மைதானம் – வைரலாகும் வீடியோ!

அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி வரை அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. இதில், சுப்மன் கில் மட்டும் 60 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 129 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா (8), நேஹல் வதேரா (4), கேமரூன் க்ரீன் (30), சூர்யகுமார் யாதவ் (61), திலக் வர்மா (43) என்று முன்வரிசை வீரர்கள் ரன்கள் சேர்த்தனர்.

சொந்த மைதானத்தில் ஹீரோவான ஸ்கை, வெளி மைதானத்தில் காமெடியன்!

பின்னர் வந்த விஷ்ணு வினோத் (5), டிம் டேவிட் (2), கிறிஸ் ஜோர்தான் (2), பியூஷ் சாவ்லா (0), குமார் கார்த்திகேயா (6), ஜேசன் பெஹ்ரண்டார்ப் (3) என்று சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியாக 18.2 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.

WTC இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு: முதல் பரிசு ரூ.13.2 கோடி, 2ஆம் பரிசு ரூ.6.5 கோடி!

இதில், ரோகித் சர்மா கையி காயம் ஏற்பட்டது. கேமரூன் க்ரீன் பேட்டிங் ஆடும் போது அவருக்கு காயம் ஏற்படவே வெளியில் சென்றார். அதன் பிறகு வந்து பேட்டிங் ஆடினார். இஷான் கிஷானும் இடது கண் பகுதியில் காயம் ஏற்படவே அவரும் வெளியில் சென்றார். அவருக்குப் பதிலாக விஷ்ணு வினோத் பேட்டிங் ஆட வரவில்லை. இப்படி ஒரே போட்டியில் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் 28 ஆம் தேதி நாளை இதே மைதானத்தில் இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது.

click me!