ICC WTC ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published May 26, 2023, 9:24 PM IST
Highlights

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-2021 ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டைட்டிலை வென்று சாதனை படைத்தது நியூசிலாந்து அணி.  

கடந்த முறை ஃபைனலுக்கு முன்னேறி கோப்பையை இழந்த இந்திய அணி இந்த முறையும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

ICC WTC ஃபைனலில் இஷான் கிஷன் - பரத் இருவரில் யார் விக்கெட் கீப்பர்..? ரவி சாஸ்திரி கருத்து

வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் ஃபைனல் தொடங்குகிறது. இந்த முறை ஃபைனலில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் களமிறங்குகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறங்குவார். 3ம் வரிசையில் புஜாரா, 4ம் வரிசையில் கோலி என வழக்கமான பேட்டிங் ஆர்டர் தான். ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் அணியில் இடம்பெறாத நிலையில், நல்ல ஃபார்மில் ஆடி இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்ற ரஹானே தான் 5ம் வரிசையில் ஆடுவார்.

விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத். ஸ்பின்னராக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருடன் ஜெய்தேவ் உனாத்கத் - உமேஷ் யாதவ் இருவரில் ஒருவர் இறங்குவார். 

வலுவான இந்திய அணி காம்பினேஷன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜெய்தேவ் உனாத்கத்/உமேஷ் யாதவ்.
 

click me!