இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸி இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக விலகியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 26 ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது.
இதில், டீன் எல்கர் அதிகபட்சமாக 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸ் செய்தது. ஆனால், இதில், தென் ஆப்பிரிக்கா பவுலர்களின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக விராட் கோலி மட்டுமே 76 ரன்கள் எடுக்க, இந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. இதையடுத்து வரும் ஜனவரி 3ஆம் தேதி 2ஆவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸி விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கோட்ஸிவிற்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 16 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 74 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. பேட்டிங்கில் 18 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் குவித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் 7 வெவ்வேறு ஆண்டுகளில் 2000க்கும் அதிகமாக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!