ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒருவருக்கு மட்டுமே போட்டியை மாற்றக் கூடிய சக்தி உண்டு என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பையில் சாதனை: ராஜ வாழ்க்கை வாழும் ஷமி: சொத்து மட்டும் ரூ. 47 கோடி, கார் கலெக்ஷன் வேறு!
இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்தப் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்ற வீரர்கள் யார் யார் என்ற விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் போட்டியை மாற்றக் கூடிய சக்தி ஷ்ரேயாஸ் ஐயரிடம் தான் இருக்கிறது.
ஏனென்றால், மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை சமாளிப்பது ஒன்றும் எளிதான காரியமல்ல. ஆஸ்திரேலியாவின் சுழற் ஜாம்பவானான ஆடம் ஜம்பா ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இதுவரையில் அவர் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதே போன்று கிளென் மேக்ஸ்வெல்லும் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடிய பந்து வீச்சாளர். இவர்களது ஓவர்களில் பேட்டிங் செய்து ரன் அடிப்பது என்பது சற்று கடினமான ஒன்று. அப்படியிருக்கும் போது மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடும் ஷ்ரேயாஸ் ஐயர் இவர்களது ஓவர்களில் ரன் குவிப்பார் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து, அசத்தினார். இந்த உலகக் கோப்பை போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் 6 போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், கடைசியாக விளையாடிய அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார். இதுவரையில் விளையாடிய 10 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் 526 ரன்கள் குவித்துள்ளார்.
முகமது ஷமியின் சொந்த கிராமத்தில் மினி கிரிக்கெட் மைதானம், உடற்பயிற்சி கூடம் கட்ட உபி அரசு முடிவு!