வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உடற்தகுதியுடன் இருந்தால் உலகக் கோப்பை தொடரிலும் கூட விளையாடுவார்கள் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. வரும் 26 ஆம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
ஏன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்? விளக்கம் கொடுத்த அஜித் அகர்கர்!
இதே போன்று ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முதலில் பேசிய அஜித் அகர்கர், ஏன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாமல், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதற்கான விளக்கம் கொடுத்தார். அதன் பிறகு பேசிய கவுதம் காம்பீர் வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உடற்தகுதியுடன் இருந்தால் 2027 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடுவார்கள் என்று கூறியிருந்தார். இது குறித்து கவுதம் காம்பீர் கூறியிருப்பதாவது: ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் தங்களால் என்ன வழங்க முடியும் என்பதை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு 8.5 கோடி நிதி உதவி - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!
இருவரிடமும் நிறைய கிரிக்கெட் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துடன் அவர்கள் இருவரும் உடற்தகுதியுடன் இருந்தால் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் இடம் பெறுவார்கள். இருவருமே உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் தான். அவர்களை நிரந்தரமாக வைத்திருந்தால் அது அணிக்கு அதிர்ஷ்டம். அவர்களுக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சம் இருக்கிறது. முடிந்த வரையில் அவர்களை அணியில் வைத்திருங்கள் என்று கூறியுள்ளார்.