ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஏன் சூர்யகுமார் யாதவ் டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறித்து தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளு இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு 8.5 கோடி நிதி உதவி - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!
இதே போன்று டி20 தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால், அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருக்கும் போது ஏன், அவர் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதோடு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் என்று பலரும் அடுக்கடுகான விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில் தான் ஏன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாமல், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அஜித் அகர்கர் கூறியிருப்பதாவது: ஹர்திக் பாண்டியா எங்களுக்கு முக்கியமான வீரர். அவரிடம் கண்டுபிடிக்க கடினமான திறன்கள் உள்ளன. கடந்த 2 வருடங்களாக அவருக்கு ஃபிட்ன்ஸ் சவாலாக உள்ளது. வரும் 2026 டி20 உலகக் கோப்பை வரையில் சில விஷயங்களை பார்க்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், சூர்யகுமார் யாதவ் கேப்டனாவதற்குரிய எல்லா தகுதிகளையும் கொண்டுள்ளார். அவருக்கு கிரிக்கெட் பற்றிய சிந்தனை அதிகளவில் உள்ளது. எல்லா ஆட்டங்களிலும் விளையாடக் கூடியவர் என்று கூறியுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் இலங்கை தொடர் மூலமாக தனது பணியை மேற்கொள்ள இருக்கிறார்.
IND vs SL T20I Series:
ஜூலை 26: இலங்கை – இந்தியா முதல் டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 28: இலங்கை – இந்தியா 2ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
ஜூலை 30: இலங்கை – இந்தியா 3ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே
IND vs SL ODI Series:
ஆகஸ்ட் 02: இலங்கை – இந்தியா முதல் ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 04: இலங்கை – இந்தியா 2ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு
ஆகஸ்ட் 07: இலங்கை – இந்தியா 3ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு