நொண்டிச்சாக்குலாம் சொல்லக்கூடாது.. மும்பையும் சிஎஸ்கேவும் மாறி மாறி கோப்பையை ஜெயிக்க இதுதான் காரணம்!!

By karthikeyan VFirst Published May 14, 2019, 5:08 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் சிஎஸ்கே அணி மூன்று முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. இந்த இரு அணிகளும்தான் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் ஒருமுறை கோப்பையை வெல்வதற்கே முக்கு முக்குனு முக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் அசால்ட்டாக கோப்பையை வெல்கின்றன. 
 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இந்த சீசனில் நான்காவது முறையாக இரு அணிகளும் இறுதி போட்டியில் மோதின. அந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. 

மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் சிஎஸ்கே அணி மூன்று முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. இந்த இரு அணிகளும்தான் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் ஒருமுறை கோப்பையை வெல்வதற்கே முக்கு முக்குனு முக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் அசால்ட்டாக கோப்பையை வெல்கின்றன. 

நாங்கள் இரு அணிகளும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கோப்பையை மாறி மாறி பரிமாறிக்கொள்கிறோம் என சிஎஸ்கே கேப்டன் தோனியே தெரிவித்திருந்தார். அந்தளவிற்கு இரு அணிகளும் அசால்ட்டாக கோப்பையை வெல்கின்றனர். சில அணிகளுக்கு இதுவே பெரும் கனவாக இருக்கும் நிலையில், மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் மட்டும் எளிதாக கோப்பையை வெல்கின்றன. 

அதற்கான காரணத்தை காம்பீர் தெரிவித்துள்ளார். கேகேஆர் அணிக்கு இரண்டு கோப்பையை வென்று கொடுத்த காம்பீர், மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளின் ஆதிக்கத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில், பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்ல தகுதியுள்ள அணிகள் தான். ஆனால் நெருக்கடியை கையாளுவதில் கைதேர்ந்த அணிகளாக திகழ்வதால் தான் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மற்ற அணிகளை காட்டிலும் எளிதாக நாக் அவுட் சுற்று போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெல்கின்றன. சன்ரைசர்ஸ் அணியில் வார்னர், பேர்ஸ்டோ இல்லை; டெல்லி அணி இளம் வீரர்களை கொண்ட அணி; அதனால்தான் இந்த அணிகளால் வெல்ல முடியவில்லை என்ற நொண்டிச்சாக்குகளை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 

மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் பக்காவா திட்டங்கள் தீட்டி, எந்த சூழலிலும் அவர்களின் திட்டங்களிலிருந்து விலகாமல் அதை அப்படியே செயல்படுத்துகின்றன. அதேபோல ஒருசில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக வீரர்களை உடனே மாற்றுவதில்லை. ராயுடு, வாட்சன் ஆகியோரை சிஎஸ்கே அணி தூக்கவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதையேதான் மும்பை அணியும் செய்கிறது. இஷான் கிஷான், சரியாக ஆடவில்லை என்றாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று அணிகளையும் பாராட்டி எழுதியுள்ளார் காம்பீர். 
 

click me!