தோனி - ரோஹித்.. யாரு பெஸ்ட் கேப்டன்..? மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அதிரடி

By karthikeyan VFirst Published May 14, 2019, 4:12 PM IST
Highlights

சிஎஸ்கே அணி வெற்றிகரமானதாக திகழ, கேப்டன் தோனி தான் முக்கிய காரணம். கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், வீரர்களை பயன்படுத்தும் விதம், நெருக்கடிகளை சமாளிப்பது, திட்டங்கள் தீட்டுவது ஆகியவற்றில் சிறந்தவர் தோனி. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இந்த சீசனில் நான்காவது முறையாக இரு அணிகளும் இறுதி போட்டியில் மோதின. அந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. 

மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும் சிஎஸ்கே அணி மூன்று முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. கேப்டன்சியில் சிறந்த தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு சவாலான ஒரே அணி ரோஹித்தின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தான். 

சிஎஸ்கே அணி வெற்றிகரமானதாக திகழ, கேப்டன் தோனி தான் முக்கிய காரணம். கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், வீரர்களை பயன்படுத்தும் விதம், நெருக்கடிகளை சமாளிப்பது, திட்டங்கள் தீட்டுவது ஆகியவற்றில் சிறந்தவர் தோனி. தோனியின் இந்த அனைத்து தலைமைத்துவ தகுதிகளும் ரோஹித்திடமும் உள்ளன. 

ரோஹித் சர்மா அபாரமான மற்றும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியோ அல்லது தோனி ஆடிய புனே அணியோ(2017 இறுதி போட்டி) வீழ்த்த முடியவில்லை. தோனியை விட ரோஹித் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். 

2013, 2015 ஆகிய இரண்டு சீசன்களை தொடர்ந்து இந்த சீசனிலும் இறுதி போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.

இந்நிலையில், தோனி - ரோஹித் சர்மா ஆகிய இருவரின் கேப்டன்சி குறித்தும் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். தோனி - ரோஹித் ஆகிய இருவருமே செம ஷார்ப். தோனி நீண்டகாலமாக கேப்டனாக இருக்கிறார். ஆனால் ரோஹித் கேப்டனாக இருந்த இந்த குறுகிய காலத்தில் நம்பமுடியாத அளவுக்கு வெற்றிகளை குவித்துள்ளார். ஆட்டத்தின் போக்கின் மீதான புரிதல் மற்றும் போட்டியின் சூழல் குறித்த அவர்களின் விழிப்புணர்வு இந்த இரண்டுமே அவர்கள் சிறந்த கேப்டன்களாக திகழ காரணம். போட்டியின் முதல் பந்திலிருந்தே அதன் போக்கை சரியாக கணித்து அதன்படி செயல்படக்கூடியவர்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!