5 முறை எம்பியாக இருந்த ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தி பஹரம்பூர் தொகுதியில் வெற்றி வாகை சூடிய யூசுப் பதான்!

By Rsiva kumar  |  First Published Jun 4, 2024, 9:05 PM IST

மேற்குவங்க மாநிலம் பஹரம்பூர் மக்களவை தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யூசுப் பதான் கிட்டத்தட்ட 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், மேற்குவங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் 3,40,412 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். 5 முறை எம்பியாக இருந்த ரஞ்சன் இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 300253 வாக்குகள் பெற்று 40,000 வாக்குகள் பின்னடைவில் தோல்வியை தழுவியுள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் மேற்குவங்க மாநிலம் பஹரம்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் போட்டியிட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக 5 முறை காங்கிரஸ் எம்பியாக திகழ்ந்த ரஞ்சன் சவுத்ரியை முதல் முறையாக யூசுப் பதான் கிட்டத்தட்ட 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 17,83,078 வாக்காளர்கள் இருந்தனர், அதில் 9,06,760 ஆண்கள், 8,76,275 பெண்கள் மற்றும் 43 மூன்றாம் பாலினத்தவர்கள்.

இதில், மாலை 5 மணி நிலவரப்படி யூசுப் பதான் 3,40,412 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். 5 முறை எம்பியாக இருந்த ரஞ்சன் இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 300253 வாக்குகள் பெற்று 40,000 வாக்குகள் பின்னடைவில் தோல்வியை தழுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!