தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 4ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா பேட்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 4ஆவது டி20 போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் வனிந்து ஹசரங்கா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தற்போது இலங்கை பேட்டிங் செய்கிறது. இலங்கை அணியில் சிஎஸ்கே வீரரான மதீஷா பதிரனா இடம் பெற்றுள்ளார். மேலும், மகீஷ் தீக்ஷனாவும் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 17 டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), கமிண்டு மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் சனாகா, வணிந்து ஹசரங்கா (கேப்டன்), மகீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா, நுவன் துஷாரா.
தென் ஆப்பிரிக்கா:
குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேஷவ் மகராஜ், கஜிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோட்ர்ஜே, ஆட்னீல் பார்ட்மேன்.