பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரானது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது நடைபெறும் 2ஆவது போட்டியில் குரூப் சியில் இடம் பெற்ற பப்புவா நியூ கினியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. கயானாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பப்புவா நியூ கினியா அணி பேட்டிங் செய்கிறது.
பப்புவா நியூ கினியா:
டோனி உரா, அஸாத் வாலா (கேப்டன்), சீசே பாபு, லேகா சியாகா, ஹிரி ஹிரி, சார்லஸ் அமினி, கிப்லின் டோரிகா (விக்கெட் கீப்பர்), அலேய் நாவ், சாத் சோப்பர், கபுவா மோரியா, ஜான் கரிகோ.
வெஸ்ட் இண்டீஸ்:
ஜான்சன் சார்லஸ், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ரொமாரியோ ஷெஃப்பர்டு, அகீல் ஹூசைன், அல்சாரி ஜோசஃப், குடகேஷ் மோட்டீ.