தோனியை பிசிசிஐக்கு பரிந்துரை செய்த முன்னாள் பெங்கால் வீரர் பிரகாஷ் போத்தார் காலமானார்!

By Rsiva kumarFirst Published Jan 4, 2023, 10:46 AM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனியை பிசிசிஐக்கு பரிந்துரை செய்த பெங்கால் அணியின் முன்னாள் கேப்டன் பிரகாஷ் போத்தார் கடந்த 29 ஆம் தேதி காலமானார்.

கடந்த 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் பிரகாஷ் சந்திர போத்தார். முதல் இந்திய கிரிக்கெட் வீரர். பிரகாஷ் போத்தார், பெங்கால் கிரிக்கெட் அணிக்காகவும், ராஜஸ்தான் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அதன் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் திறமை வள மேம்பாட்டு (டிஆர்டிஓ) அதிகாரியாக செயல்பட்டார். அப்போது ராஞ்சியில் பிறந்து வளர்ந்த எம் எஸ் தோனியின் பெயரை பிசிசிஐக்கு பரிந்துரை செய்தார்.

ரசிகர்களின் கண்ணீர் மல்க விடைபெற்றுச் சென்ற கறுப்பு முத்து: பீலேயின் உடல் நல்லட்டக்கம் செய்யப்பட்டது!

அதன் பிறகு தான் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமானது. ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டிகளில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்று நிரூபித்தார். கூல் கேப்டன் என்றும் தோனி அழைக்கப்படுகிறார். உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில், வங்காளம், ராஸ்தான், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம் ஆகிய அணிகளுக்காக 74 முதல் தர போட்டிகளில் விளையாடினார்.

ஷிவம் மாவி 4 விக்கெட்: கடைசில சொதப்பியும் காப்பாத்திக் கொடுத்த அக்‌ஷர்: இந்தியா த்ரில் வெற்றி!

இதில், 11 சதங்கள் அடங்கும். மேலும், 3836 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 1964 ஆம் ஆண்டு போர்டு பிரெசிடெண்ட் லெவன் அணிக்காக விளையாடிய பிரகாஷ் போத்தார், மெரிலேபோன் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஞ்சி டிராபி போட்டிகளில் இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். கடந்த 1970 - 71 ஆம் ஆண்டுகளில் ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் 3 ஆவது இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி 562 ரன்களும் எடுத்தார்.

அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஷிவம் மாவி!

பெங்கால் அணிக்காக விளையாடிய கால் இறுதிப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான 199 ரன்கள் எடுத்தார். போத்தாரின் கிரிக்கெட் வரலாற்றில் பெங்கால் அணிக்காக ஒரு சில போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த 1976, 77 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் திறமை வள மேம்பாட்டு (டிஆர்டிஓ) அதிகாரியாக செயல்பட்டார். கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியின் போது தோனியின் திறமையை கண்டு வியந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தோனியின் திறமையை சரியான முறையில் பயன்படுத்தினால், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு சிறந்த மதிப்பு மிக்க வீரராக இருப்பார் என்பதை நான் உணர்ந்தேன். அதனால், தான் அவரை நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பரிந்துரை செய்தேன் என்று கூறியிருந்தார்.

வாங்கடே மைதானத்தில் நடந்த கடைசி 7 டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்த 2 அணி எது தெரியுமா?

கடந்த 2003 - 2004 ஆம் ஆண்டுகளில் தோனி முதலில் இந்திய ஏ அணிக்காகவும் அதன் பிறகு தேசிய அணிக்காகவும் விளையாடினார். பிரகாஷ் போத்தார் ஒரு வருட காலம் மட்டுமே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் திறமை வள மேம்பாட்டு (டிஆர்டிஓ) அதிகாரியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரகாஷ் போத்தார் கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 82 என்பது குறிப்பிடத்தக்கது.

click me!