இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 25ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக 1996க்குப் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்தது.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இலங்கை அணியில் தொடக்க வீரர் குசால் பெரேரா 4 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு பதும் நிசாங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா இருவரும் இணைந்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசியில் நிசாங்கா சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இந்தியாவை பின்னுக்கு தள்ளி மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து!
இறுதியாக பதும் நிசாங்கா 83 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடிக்க 77 ரன்களும், சதீரா சமரவிக்ரமா 54 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசியாக இலங்கை 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.
சின்னசாமி ஸ்டேடியத்தில் 156 ரன்கள் எடுத்து மோசமான சாதனையில் இடம் பிடித்த இங்கிலாந்து!
மேலும், இங்கிலாந்துக்கு எதிராக உலகக் கோப்பையில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று வருகிறது. 2007, 2011, 2015, 2019 மற்றும் 2023 என்று வரிசையாக 5ஆவது முறையாக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 29ஆம் தேதி இந்தியாவிற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து விளையாட இருக்கிறது.
ENG vs SL: அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டரை களமிறக்கிய இலங்கை; இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!