IND vs ENG: முன்னாள் சுழல் ஜாம்பவான் மறைவு: கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்!

By Rsiva kumar  |  First Published Oct 29, 2023, 5:45 PM IST

இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் மறைந்ததைத் தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியுள்ளனர்.


பிஷன் சிங் பேடி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தார். இதையடுத்து 1961 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரையில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் தான் பிஷன் சிங் பேடி 1966 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார். பிஷன் சிங் பேடி 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 656 ரன்களும், 266 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். இதில் 14 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த 1970 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்.

Bishan Singh Bedi: இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி காலமானார்!

Tap to resize

Latest Videos

இதுவரையில் எந்த இந்திய வீரரும் கைப்பற்றாத சாதனையை பேடி படைத்திருக்கிறார். ஆம், முதல் தர கிரிக்கெட்டில் 370 போட்டிகளில் விளையாடி 1560 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் தோள்பட்டை மற்றும் கை விரல்கள் மிருதுவாக இருக்க வேண்டும். அதற்கு தனது உடைகளை தானே துவைப்பதாக கூறியுள்ளார்.

India vs England: சர்வதேச கிரிக்கெட்டில் 18000 ரன்களை கடந்த ரோகித் சர்மா!

இதுவே அதற்கு சிறந்த பயிற்சி என்று சுட்டிக் காட்டியுள்ளார். பிஷன் சிங் பேடிக்கு ஒரு அங்கத் பேடி என்ற மகன் இருக்கிறார். அவர் நடிகராக இருக்கிறார். மகனுக்கு பாலிவுட் நடிகையான நேஹா தூபியாவை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் தான் பிஷன் சிங் பேடி உடல் நலக்குறைவு காரணமாக தனது 77ஆவது வயதில் கடந்த 23ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது.

India vs England: மாற்றமே இல்லை; முதல் முறையாக பேட்டிங் செய்யும் இந்தியா – டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்!

இந்த நிலையில், லக்னோவில் நடந்து வரும் இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வரையில் இந்திய அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு  ரன்கள் எடுத்துள்ளது.

India vs England: இந்திய அணிக்கு சாதகமாக லக்னோ மைதானம் மாற்றப்பட்டதா?

 

will be wearing Black Armbands in memory of the legendary Bishan Singh Bedi before the start of play against England in the ICC Men's Cricket World Cup 2023. | |

— BCCI (@BCCI)

 

click me!