இந்தியாவிற்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 29ஆவது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார். இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் சேஸிங் மட்டுமே செய்துள்ளது. தற்போது இந்தப் போட்டியில் முதல் முறையாக பேட்டிங் செய்கிறது.
India vs England: இந்திய அணிக்கு சாதகமாக லக்னோ மைதானம் மாற்றப்பட்டதா?
ஒரு கேப்டனாக ரோகித் சர்மா இன்று தனது 100ஆவது போட்டியில் விளையாடுகிறார். இதுவரையில் நடந்த 99 போட்டிகளில் 73 போட்டிகளில் வெற்றியும், 26 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளார். மேலும், ஒரு கேப்டனாக ஒரு நாள் போட்டிகளில் 38 இன்னிங்ஸில் ரோகித் சர்மா 4 சதமும், 12 அரை சதமும் அடித்துள்ளார். லக்னோவில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
India vs England: லக்னோவில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா!
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
இதுவரையில் இரு அணிகளும் 8 முறை உலகக் கோப்பையில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 4 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே போன்று இரு அணிகளும் 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 57 போட்டிகளிலும் இங்கிலாந்தும், 44 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
India vs England: 7ஆவது இந்திய கேப்டனாக 100ஆவது போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா!
மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி நடந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் 9ஆவது முறையாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரையில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடையை கட்டும் வங்கதேசம் – சாதனையோடு அரையிறுதி வாய்ப்புக்காக வீர நடை போடும் நெதர்லாந்து!