
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடந்து வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஒரு புறம் ரோகித் சர்மா சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
India vs England: இந்திய அணிக்கு சாதகமாக லக்னோ மைதானம் மாற்றப்பட்டதா?
இந்த நிலையில், ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 18000 ரன்களை கடந்த 5ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் 477ஆவது இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோர் 18000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
India vs England: லக்னோவில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா!
இதில், 3677 ரன்கள் டெஸ்ட் போட்டியிலும், 3853 ரன்கள் டி20 போட்டியிலும், 10470 ரன்கள் ஒரு நாள் போட்டியிலும் அடித்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 45 சதமும், 98 அரைசதமும் அடித்துள்ளார். ரோகித் சர்மா தொடக்க வீரராக ஒரு நாள் போட்டிகளில் 168 இன்னிங்ஸில் 41 அரைசதமும், 29 சதமும் அடித்துள்ளார். மேலும், 1-10 ஓவர்களில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலிலும் ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். அவர் 37 சிக்ஸர்கள் அடித்து 3ஆவது இடத்தில் உள்ளார்.
India vs England: 7ஆவது இந்திய கேப்டனாக 100ஆவது போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா!